ஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் – ரொயிட்டர்
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஆசியாவில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொயிட்டர் செய்தி பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்தோனேசியா பாலி பிராந்தியம் மற்றும் மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பலத்த சேதம் பதிவாகியிருந்தது.
2002 இந்தோனேசியா பாலி பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 202 பேர் உயிரிழந்ததுடன், 209 பேர் காயமடைந்தனர்.
2008 ஆம் ஆண்டு இந்தியா மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 170 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.