Main Menu

ஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு

ஆங்கில புத்தாண்டில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 

அண்மையில், போரிஸ் ஜான்சனோடு, தொலைபேசி மூலம், டிரம்ப் உரையாடிய நிலையில், தற்போது, வெள்ளை மாளிகை அழைப்பு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுபற்றி வெள்ளை மாளிகை உரிய பதில் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஜனவரி இறுதியில், பிரக்சிட்  மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுவதால், அதற்கு முன்னதாக, அமெரிக்க சென்றுவர, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.