அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் அனுமதி அளித்துள்ளார்.
வயதானவர்களுக்கு அதன் விளைவுகள் குறித்த போதிய தரவு இல்லை என்று கூறி, நாடு இதற்கு முன்னர் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது.
ஆனால், தற்போது அதன் நிலைப்பாட்டை மாற்றியுள்ள அங்கேலா மேர்க்கெல், சமீபத்திய ஆய்வுகள் இப்போது எல்லா வயதினருக்கும் ஒப்புதல் அளிக்க போதுமான தரவுகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வயதானவர்களிடையே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸைத் தொடர்ந்து வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் ஒப்புதல் அளிப்பதாக பெல்ஜியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.