அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் இருந்து வெளியேறி யுள்ளார் – ஜேர்மன் மருத்துவமனை
கிரெம்ளின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பேர்லினில் உள்ள மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சைபீரியாவில் உள்நாட்டு விமானத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக பேர்லினுக்கு விமானத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு போதுமான அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று சரைட் மருத்துவமனை இன்று புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவருக்கு விஷம் வழங்கப்பட்டமை குறித்து ஆதாரங்கள் இல்லை என கிரெம்ளின் கூறியுள்ளதுடன் இதுவரை விசாரணையைத் தொடங்கவும் மறுத்துவிட்டது.
இந்நிலையில் அலெக்ஸி நவல்னியின் நிலை குறித்த விவரங்களை பகிரங்கமாக்குவதற்கான முடிவு நோயாளி மற்றும் அவரது மனைவியுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.