Main Menu

இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நோவக் ஜோகோவிச்- சிமோனா ஹெலப் சம்பியன்!

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில், நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹெலப் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார்.

இது நோவக் ஜோகோவிச்சின் ஐந்தாவது சம்பியன் பட்டமாகும். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் தொடராகும்.

இத்தகைய தொடரில் ஜோகோவிச் ருசித்த 36ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் தொடரில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 சம்பியன் பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.
……..

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல்செட்டை 6-0 என சிமோனா ஹெலப் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் 2-1 என சிமோனா ஹெலப் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், கரோலினா பிளிஸ்கோவாவுக்கு இடது தொடையில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது.

இதனால் சிமோனா ஹெலப் போட்டியிலிருந்து விலக, சிமோனா ஹெலப் சம்பியனாக அறிவிக்கப்பட்டார். இது சிமோனா ஹெலப்பின் முதல் சம்பியன் பட்டமாகும்.

பகிரவும்...