அரச தரப்பிற்கும், தொழில் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும்
பிரக்சிட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பிருத்தானிய அரச தரப்பிற்கும், எதிர்கட்சியான தொழில் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பிருத்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
லக்சன்பேக்கில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களை சந்திப்பதற்காக செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து உரையாடுகையில், பிருத்தானிய பிரதமர் தெரேசா மே, இதய சுத்தியுடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக எடுத்து வரும் விடயங்கள் குறித்து விளக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பிருத்தானிய மக்களும் பிரக்சிற் பிரச்சனைக்கு முழு அளவிலான தீர்வை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் பிருத்தானிய வெளிவிவகாரத்றை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.