அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதும் பயங்கராத தாக்குதலை தடுக்க தவறியமை மூலம் அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று வருடகால தடைக்கு உட்பட்டுள்ள சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஏலவே புலனாய்வு தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.