Main Menu

ஸ்பெயின் தேர்தலில் சோசலிச கட்சி வெற்றி

ஸ்பெயின் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் சோசலிச கட்சி வெற்றியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. எனினும், இத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அக்கட்சி தவறியுள்ளது.

பிரதமர் பெட்ரோ சன்செஸின் சோசலிச கட்சி 29 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து ஆட்சியமைக்க வலதுசாரி கட்சி, பிராந்திய கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவை பெறவேண்டும்.

அத்தோடு, கடந்த 1970ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், முதற்தடவையாக இம்முறை வலதுசாரி கட்சியொன்று நாடாளுமன்றத்திற்கு செல்கின்றது. வலதுசாரி கட்சியான வொக்ஸ் கட்சி 10.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

பன்முக கலாசார வாதம், பெண்ணியம், கட்டுப்பாடற்ற குடிப்பெயர்வு ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகளை வொக்ஸ் கட்சி கொண்டுள்ளது.

அத்தோடு, சமத்துவமின்மை மற்றும் ஊழலை தடுப்பது தமது கட்சிக்கு கடும் சவாலாக காணப்படுவதாகவும் வெற்றிபெற்றால் அவை குறித்து செயற்படவுள்ளதாகவும் பிரதமர் சன்செஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்பெயினில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற மூன்றாவது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...