அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு
அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.