OM அணி வீரர் மீது எச்சில் துப்பிய விவகாரம்! – PSG வீரருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை
OM அணி வீரர் ஒருவர் மீது எச்சில் துப்பிய காரணத்தினால் பரிசின் PSG அணி வீரர் ஒருவருக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது PSG அணிக்காக விளையாடிவரும் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த Angel Di Maria இற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பரிஸ் அணிக்கும் மார்செய் அணிக்கும் இடம்பெற்ற மோதலில் 0-1 எனும் கணக்கில் பரிஸ் தோல்வியடைந்திருந்தது. அந்த போட்டியின் போது, மார்செய் அணியின் (OM) வீரர் Alvaro Gonzales மீது Angel Di Maria எச்சில் துப்பியிருந்தார். பின்னர் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றது. 1 இல் இருந்து 6 போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக நான்கு போட்டிகளில் விளையாட Angel Di Maria இற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதைபந்தாட்ட ஒழுக்காறாக் குழு (commission de discipline de la Ligue de football professionnel (LFP) இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கை செப்டம்பர் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்படும். அன்றைய போட்டியின் போது, நட்சத்திர வீரர் நெய்மருக்கும் இது போன்ற ஒரு துவேச சம்பவத்தில் சிக்கி மூன்று போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது