‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை
ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது.
இது சீன தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான Huawei க்கு ஒரு பலத்த அடியாக அமைந்துள்ளது.
Huawei யின் புதிய ஸ்மார்ட்ஃ தொலைபேசிகளில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் Huawei யின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்போது கூகுள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து முதலில் செய்தி வெளியிட்ட ராயடர்ஸ் நிறுவனம்,
“கூகுளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை Huawei இழக்கிறது என்றும், மேலும் புதிய அலைப்பேசிகளில் யூடியூப் மற்றும் மேப்ஸ் போன்ற வசதிகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
பொதுவான அனுமதியுடன்(open source) இருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டமை ஹுவாவே ஸ்மார்ட் தொலைபேசிகளில் இனி கூகுள் செயலி இருக்காது.
5ஜி தொலைபேசி வலைப்பின்னல் Huawei யின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இதுவரை இதுகுறித்து பிரிட்டன் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தடையும் அறிவிக்கவில்லை.
இந் நிலையில் Huawei தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை ரொய்ட்ர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்கு பதிலளித்து Huawei நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,
உலகளாவிய ரீதியில் ஆண்ட்ராய்ட் வளர்ச்சிக்கு குறிப்பிட்டத்தக்களவு பங்களரிப்பை Huawei வழங்கியுள்ளது. உலகின் பிரதான பங்காளர்களில் ஒன்றாக, அவர்களின் திறந்த மூல கட்டமைப்பில் நாம் நெருக்கமான செயலாற்றி பாவனையாளர்களுக்கு துறைக்கும் பயனளிக்கும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
கையிருப்பலுள்ள மற்றும் உலகளாவிய ரீதியில் விற்பனையாகியுள்ள Huawei மற்றும் Honar ஸ்மார்ட் தொலைபேசிகள் மற்றும் டப்லெட் தயாரிப்புகளுக்கான பாதுகாப்பு மெருகேற்றங்களையும், விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் Huawei தொடர்ந்தும் வழங்கும்.
நாம் தொடர்ந்தும் பாதுகாப்பான மற்றும் நிலைபேறான மென்பொருள் கட்டமைப்பை நிறுவுவதுடன், அதனூடாக உலகளாவிய ரீதியில் காணப்படம் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.