Main Menu

G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்

சீனாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலினை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் புதிதாக பன்றியிலிருந்து மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த வைரஸ் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த வைரஸ் பற்றி தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை என சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனாவினால் முழு உலகமுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...