Main Menu

Disney ஊழியர்கள் பணிநீக்கம் – புளோரிடாவில் கால்வாசிப் பேருக்குப் பாதிப்பு

Disney நிறுவனத்தின் பூங்கா பிரிவு தனது ஊழியர்களில் 28,000 பேரைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிடுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வேலை செய்யும் கால்வாசிப்பேர் அதனால் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

சென்ற வாரம், அம்மாநில, உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நிறுவனம் அது பற்றித் தெரிவித்துள்ளது.

புளோரிடாவில் தொழிற்சங்கத்தில் இல்லாத Disney ஊழியர்கள் சுமார் 6,390 பேர், டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவர்.

நிறுவனம், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Walt Disney World ஊழியர்கள் சுமார் 43,000 பேர் தொழிற்சங்கத்தில் உள்ளனர்.

கிருமித்தொற்றால் வர்த்தகம் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கடினமான முடிவை எடுத்துள்ளதாக Disney ஊழியர் தொடர்புப் பிரிவுத் துணைத் தலைவர் கூறினார்.

புளோரிடாவில் உள்ள Disney பூங்காவை மீண்டும் திறக்க இன்னும் அம்மாநிலம் அனுமதி அளிக்கவில்லை. 

பகிரவும்...