இலங்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் Online ஊடாக உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக தமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்!
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம் நவாஸ் தலைமையில் கடந்த 20ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் குறித்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
வவுனியா நகரில் மேலும் 250 பேருக்கு அன்ரிஜென் பரிசோதனை!
வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அன்ரிஜென் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. வவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்காத ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் எனமேலும் படிக்க...
இலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்?
ஜெனீவாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு மோசமான அறிக்கையை வெளியிடுவார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா அமர்வுக்குமேலும் படிக்க...
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – மஹிந்த ராஜபக்ஷ
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் (Yoo Brand) பாதணி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம்மேலும் படிக்க...
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் குறித்து விடேச கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம-மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் 10ஆவது வருட நிறைவு விழா நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துக் கொண்டுமேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய சரத் பொன்சேகா, 18 முதல் 26மேலும் படிக்க...
முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து கவலை!
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலையை எழுப்புவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயம் மற்றும்மேலும் படிக்க...
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்க தீர்மானம்
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆயுர்வேத வைத்திய முறை தொடர்பாக பாடசாலை மாணவர்களை தௌிவூட்டுவதற்காக இந்தமேலும் படிக்க...
விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்: அனைத்தையும் இழந்து விட்டு சிந்திப்பதில் பலனில்லை- இந்து இளைஞர் பேரவை!
விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை என்றும் சர்வதேச இந்து இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்து மதத்தின் பெயரால் பல அமைப்புகள் உள்ள போதும் தற்போதைய சூழ்நிலையில் அவை பெயரளவில்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது. இதன்போது பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிமேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர்,மேலும் படிக்க...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு?
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.மேலும் படிக்க...
வவுனியா விபத்தில்: ஒருவர் படுகாயம்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்தமேலும் படிக்க...
கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி !
அரசாங்கம் நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்றுகள் இப்போது கண்டியில் உள்ள புனித இடங்களில் பரவி வருவதாகவும்மேலும் படிக்க...
யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று புறப்பட இருக்கின்றது. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்துமேலும் படிக்க...
இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்று வருகின்றது. குறித்தமேலும் படிக்க...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த முன்மொழிவினை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தைமேலும் படிக்க...
வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழமை) முதல் மீண்டும் செயற்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் சில குளங்கள் வான் பாய்வதனால் போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 286
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- …
- 435
- மேலும் படிக்க
