இலங்கை
அமைச்சுப் பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம் – சி.பி.ரத்னாயக்க
அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம் தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார். பத்தனை பகுதியில்மேலும் படிக்க...
யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைமேலும் படிக்க...
வேற்றுமை கடந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்- சாணக்கியன்
தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை கடந்து விழித்தெழ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்மேலும் படிக்க...
தேர்தல் ஆணைக் குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்கமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு
வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை
பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ளமேலும் படிக்க...
அமைச்சு பதவியை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது – பிரசன்னா
அமைச்சர் அந்தஸ்தை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது. எமது மக்களின் நிரந்த சுயஉரிமைகளை முதலில் பெற்று நலிவடைந்துள்ள எமது பிரதேசங்களை நாங்களே அபிவிருத்தி செய்ய வேண்டும் என டெலே அமைப்பின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித்மேலும் படிக்க...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – மஹிந்த
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது. குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன்மேலும் படிக்க...
பேருந்துகளில் பயணிப்போருக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு
பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வகையில்மேலும் படிக்க...
சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை – திகாம்பரம்
மலையக மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் நடத்துகின்றோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அத்துடன், என்னையும், மனோவையும், ராதாவையும் எவராலும் ஏமாற்ற முடியாது.மேலும் படிக்க...
கொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல்? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்
தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,மேலும் படிக்க...
நாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேட அரசாங்கம் முயற்சி- அநுர
நாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேடவே, கொரோனாவின் உண்மை நிலையை அரசாங்கம் மறைக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்மேலும் படிக்க...
புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் இல்லை – சுமந்திரனின் கருத்துக்கு சம்பந்தன் பதில்
புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லைமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டால் நிச்சயமாக இலங்கையால் மீள் எழும்ப முடியாது – ரணில்
கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சம் இலங்கையில் நிலவிவரும் இந்த காலத்தில், தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் பேசி, பொதுத் தேர்தல் தொடர்பாக உரிய முடிவொன்றை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்றமேலும் படிக்க...
சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்: விக்கிரமபாகுவின் கருத்தை வரவேற்றது தி.மு.க
இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு,மேலும் படிக்க...
புலிகளுடன் தொடர்புடையதாக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்களுக்குத் தடை?
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) 1,373 என்ற தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் சில வெளிநாட்டு அமைப்புகளையும் தனிநபர்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நியூஸ் இன் ஏசியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- …
- 439
- மேலும் படிக்க
