இலங்கை
மொட்டு கட்சியுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்: மஹிந்த அழைப்பு
தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் மொட்டு கட்சியுடன் மக்கள் அனைவரும் கைகோர்க்க முன்வர வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில்மேலும் படிக்க...
பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் – உமாச்சந்திரா பிரகாஷ்
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றி வளைப்போம் – ஞானசார தேரர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளை மறுதினம் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்மேலும் படிக்க...
தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்!

தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில்,மேலும் படிக்க...
இலங்கையில் அரசியல் சாசனமே இல்லை: இதுவொரு தோல்வி அடைந்த நாடு- சம்பந்தன்
இலங்கையின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை எனவும் அந்தவகையில் இலங்கை ஒருமேலும் படிக்க...
கூட்டமைப்பை தோற்கடித்து புலிகளின் அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்து விட்டோம் என்பதை கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதைக்கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர் என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்மேலும் படிக்க...
கட்சிகளின் முக்கிய கோரிக்கையினை நிராகரித்தார் மஹிந்த!
எதிர்வரும் மூன்றாம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கட்சிகளின் செயலாளர்களினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளைமேலும் படிக்க...
பத்து வருடங்களில் வடகிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் – இன்பராசா
விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புணர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டா தசாப்தம்- விமல் வீரவன்ச
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேமேலும் படிக்க...
தமிழர்-சிங்களவர் இடையிலான பிளவுகளுக்கு பிரதான காரணம் பௌத்த பிக்குகளே- விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஆட்சியாளர்களைவிட பௌத்த பிக்குகளே காரணம் என விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் பிரதித் தலைவர் செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்மேலும் படிக்க...
மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நிச்சயம் தடையாக இருப்போம்- அநுர
நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமயில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்தும் மோசமடைகின்றது – ஐ.தே.க. கவலை
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது. கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தஅக்கட்சியின் உதவி பொதுச் செயலாளர் ருவான் விஜேவர்தன, தவறு செய்பவர்களைப் பாதுகாக்க நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கம்மேலும் படிக்க...
“சிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்”
இந்த நாட்டுக்கு உகந்தமுறை சமஷ்டி என சிங்கள தலைவர்களே கூறியுள்ள நிலையில் அது எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரசாரக்கூட்டம்மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமைமேலும் படிக்க...
வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித் தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி – ரிஷாட்
வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில்,மேலும் படிக்க...
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், திருகோணமலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு சென்ற அவர், ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது கிழக்குமேலும் படிக்க...
வடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக? சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன்
எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக்மேலும் படிக்க...
ஜனநாயக போர்வையில் வரும் பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை – பிரதமர்
போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மஹிந்த மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்- தவராசா
மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். திருக்கோவில்- மண்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- …
- 439
- மேலும் படிக்க
