Main Menu

மொட்டு கட்சியுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்: மஹிந்த அழைப்பு

தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் மொட்டு கட்சியுடன் மக்கள் அனைவரும் கைகோர்க்க முன்வர வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரசார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நாம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

ஆனால், எதிர்க்கட்சி இரண்டாக பிரிந்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன.

அத்துடன் அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் அனுமதித்த கொள்கை பிரகடனத்தை செயற்பாட்டிற்கு கொண்டு வரும் இறுதிக்கட்டம் நாடாளுமன்றத்தில் உள்ளமையினால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் குழுவினரை நாடாளுமன்றத்திற்கு நியமிப்பது மக்களின்  கடமையாகும்.

மாறாக நாடாளுமன்றத்தின் அதிகாரம், எதிர்கட்சிக்கு சென்றால் அறுபத்து ஒன்பது இலட்ச மக்கள் அனுமதித்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தை செயற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்.

ஆகவே மக்கள்  தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் மொட்டு கட்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...