இலங்கை
மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது!
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் இல்லங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 06:05மணிக்குமேலும் படிக்க...
முல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி, பலவந்தமாகமேலும் படிக்க...
காணாமல் போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் பட்டியல் வெளியீடு
காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாக கிடைத்த முறைப்பாடுகள்,மேலும் படிக்க...
நாடு திரும்பியவர்களை தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து: 17 பேர் காயம்
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காகவே அஜித் டோவால், இன்று இலங்கைக்கு விஜயம்மேலும் படிக்க...
கஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில்மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும்மேலும் படிக்க...
புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இதுவரை, பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட இவரின் பெயர் கடந்தமேலும் படிக்க...
மாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை!
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் நிகழ்த்திய உரையில், “கார்த்திகை-27 இலங்கைத் தீவிலும், உலகெங்கிலும் பரந்துமேலும் படிக்க...
ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்
ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துமேலும் படிக்க...
இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ
அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) சத்தியபிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர்மேலும் படிக்க...
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – ஐங்கரநேசன் அழைப்பு
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், ‘மாவீரர்கள் எமது மண்ணின்மேலும் படிக்க...
இறந்தவர்கள் மீது இத்துணை பயமேன்? – மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சுமந்திரன் கேள்வி
இறந்தவர்கள் மீது இத்துனை பயமேன்? என மாவீரர் தின நினைவேந்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கையின்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.மேலும் படிக்க...
மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான்மேலும் படிக்க...
மாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைமேலும் படிக்க...
1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்து – அரசாங்கம் எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1,000 ரூபாயாக ஆக உயர்த்தப்படமேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
மாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா
மாவீரர் நினைவு நாள் தடைக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என். ஸ்ரீகாந்தா மேலும்மேலும் படிக்க...
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு!
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிடக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்பதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 304
- 305
- 306
- 307
- 308
- 309
- 310
- …
- 442
- மேலும் படிக்க
