Main Menu

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு!

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிடக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்பது மணிக்கு ஆஜராகுமாறு நீதிமன்றப் பதிவாளரால் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளை இன்று மாலை மன்னாரில் உள்ள செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக, கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக இவ்வாறு கட்டளை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது,

பகிரவும்...