Author: trttamilolli
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படிமேலும் படிக்க...
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது – ட்ரம்ப்

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், நோபல் அமைதி பரிசு தமக்கு நிராகரிக்கப்பட்டதன் பின்னர், இனி அமைதியைப் பற்றி பரப்புரை செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கமேலும் படிக்க...
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) காலை தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். நடந்ததுமேலும் படிக்க...
இலங்கையில் விவசாயத் துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறி, பழங்கள் போன்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக உள்ளது.மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து

கிரீன்லாந்து மீதான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, பிரித்தானிய மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ தளங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் விரைவாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று லண்டன் சட்டமன்ற உறுப்பினர் சாக் போலன்ஸ்கி ( Zackமேலும் படிக்க...
சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கும் தொடர்ச்சியான ஹெக்கிங் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் சைபர் தாக்குதல்களைப் பற்றி விவாதிக்க ஒரு மன்றத்தை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், ஹெக்கிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தனிப்பட்ட விவாதத்தைமேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்மேலும் படிக்க...
செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்-களை மேலும் அதிகரிக்கும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம் ‘ (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின்மேலும் படிக்க...
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமைமேலும் படிக்க...
தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரைமேலும் படிக்க...
மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது

கொழும்பு – பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்மேலும் படிக்க...
புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும்மேலும் படிக்க...
“ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர்” – தமிழிசை கண்டனம்

ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுமேலும் படிக்க...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன – ஆளுநர் நா.வேதநாயகன்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட இந்த உபகுழு,மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய்

கரூர் நெரிசல் வழக்கில் இன்று (19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்றமேலும் படிக்க...
தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் சுமார் 39 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 60 க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக வருவதாக ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் தெரிவித்தார். கோர்டோபா நகருக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 1,098
- மேலும் படிக்க

