Main Menu

புரட்டாதி சனி விரதம் நாளை ஆரம்பம்

2015 மன்மத வருடத்தில் புரட்டாதிச் சனி விரதம் நாளை 19 ஆம் திகதி புரட்டாதித் திங்கள் 2 ஆம் நாள் முதலாம் வார விரதமாகும். இவ்வருடம் ஐந்து சனிக்கிழமை விரதம் நிகழவுள்ளது.

நவக்கிரகங்களுள் சனிக்கிரகம் அலிக் கிரகமாகும். மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் சனி யைப் பற்றி இக்காலத்தில் விரதமிருக்கும் சைவ அன்பர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

பஞ்ச பூதங்களில் சனி வாயுவாகக் காட்சியளிக்கின்றார். ஒரு ராசி வீட்டில் ஆகக் கூடுதலாக தங்கும் கிரகம் சனிக்கிரகமேதான் 2 1/2 ஆண்டிகள் தங்குவார். இவர் தானிருக்கும் இடத்திலிருந்து (3) – (7) – (10) ஆம் ஆகிய ஸ்தானங்களை பார்வையிடுகின்றார். தானிருக்கும் இடத்தின் தன்மைக்கேற்ப இவரது பார்வை நன்மை தீமையான பலன்களை தோற்றுவிக்கும் என்பது திண்ணம்.

காகத்தினை தன் வாகனமாகக் கொண்டு விளங்கும் சனீஸ்வரன் பிரதமைத் திதியில் மகர ராசியில், சதுர்த்தித் திதியில் கும்பராசியில், துவாதசித் திதியில் மகரராசியல் சூன்ய தோசம் பெறுகின்றார்.

ஒருவர் ஜாதகத்தில் ஆயுள்காரனாகிய சனி ஆயுள் ஸ்தானமான 8ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு தீர்க்காயுள் உண்டாகிறது. அன்றியும் 12 – 1 – 2 ஆகிய ஸ்தானங்களில் சனி சஞ்சாரம் செய்யும் போது 7 1/2 ச்சனி காலம் நடைபெறுகின்றது.

இக்காங்களில் சம்மந்தப்பட்ட ஜாதகங்கள் மிக அவதானமாக செயற்படுவதுடன் சனி பகவானையும் ஸ்ரீமத்நாராயண மூர்த்தியையும் வழிபட்டு வர வேண்டும். அப்படி வரும் போது சனி பகவானது அனுக்கிரகம் கிடைக்கும்.

கெடு பலன்கள் குறையும். அன்றியும் இடபம், துலாம், மகரம், கும்பம் போன்ற ராசிகளில் பிறந்தாலும் 2 வது சுற்று 7 1/2 சனி நடைபெற்றாலும் சனி பகவானால் கெடுதி ஏற்படுவதில்லை. மாறாக பொங்கும் சனியாகி நற்பலன்கள் உண்டாகின்றன.

புரட்டாதி மாதம் வரும் சனிக்கிழமைக்கு அப்படியொரு மகத்துவமாகும். ஜாதகத்தில்

கோசார ரீதியாக 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12 ஆகிய ஸ்தானங்கள், தாம் பிறந்த ர ¡சியிலிருந்து எண்ணி வரும் போது தற்போது விருச்சிக ராசி வீட்டில் இருக்கும்) சனி இருந்தால் அச்சாதகர்களுக்கு சனி பகவானால் கெடுபலன்களே இடம்பெறும். 3.6.11 ஆம் இடங்கள் நன்மையாகும் கூடாத ஸ்தானங்களில் சனி பகவான் தங்கி நிற்க சாதக அமைப்பைப் பெற்றவர்கள் தவறாமல் புரட்டாதிச் சனி விரதமிருந்து எள்ளெரித்து நீலப்பட்டாடை சாத்தி நீல நிழற் பூவால் அர்ச்சித்து விமோசனம் பெற்றுக் கொள்ளுங்கள். சனியைப் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாரமில்லை. சனிகொடுப்பதை தடுப்பார் எவருமில்லை.

பகிரவும்...