கிரிஷ் ஒப்பந்த வழக்கு : 4ஆவது சந்தேகநபராக சிக்கிய நாமல் ராஜபக்ஷ
கிரிஷ் ஒப்பந்த வழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
