Main Menu

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு ஒன்று விசாரணைகளுக்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அவர் சற்றுமுன்னர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்யும் சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார்.