Main Menu

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் இன்று (15) காலை 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.