கொடூர விபத்து – இருவர் உயிரிழப்பு
காலை – அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று (27) முற்பகல் அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதில், அதன் பின்னாசனத்தில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கனம்பிட்டியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணொருவரும், ஹீன்பந்தலையைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவரும் ஆவர்.
சம்பவம் தொடர்பாக காலி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
