மூளைக்குள் செயற்கை நுண்ணறிவின் மாயம் – பார்வையைத் திரும்பப் பெற்ற சாதனை அறுவை சிகிச்சை
உலகின் முதன்முறையாக நேரலைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, நோயாளியின் கட்டிய அகற்றப்பட்டுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பார்வை இழக்கும் அபாயத்திலிருந்த 48 வயதான ரிஸ் ஹிப்பர்ட் என்ற இரண்டு குழந்தைகளின் தந்தைக்குச் செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின்போது நேரலை காணொளி காட்சிகளைப் பகுப்பாய்வு செய்த இந்த செயற்கை நுண்ணறிவு கருவி, மூளையில் மறைந்திருக்கும் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை அடையாளம் கண்டு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குப் பாதுகாப்பான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பார்வை தெளிவடைந்துள்ளதாகவும், முந்தைய பக்கவிளைவுகள் அனைத்தும் நீங்கி தனக்கு மீண்டும் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
