அயல் வீட்டுக் காரருடனான வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் உயிரிழப்பு
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கொட்டல்பத்த பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் வீட்டில் நடந்த பார்ட்டியின் போது, பக்கத்து வீட்டில் உள்ள ஒருவருடன் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
அங்கு பக்கத்து வீட்டில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
