Main Menu

பாராளுமன்ற முன்னாள் பிரதம உரைபெயர்ப்பாளர் எம்.கே.ராகுலன் காலமானார்

ஓய்வு பெற்ற பாராளுமன்ற பிரதம சமகால உரைபெயர்ப்பாளரும் ஓய்வு பெற்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே.ராகுலன் தனது 81ஆவது வயதில் புதன்கிழமை (01) காலமானார்.

நீண்டகாலம் பாராளுமன்ற மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு அவர் ஆற்றிய சேவைக்காக கடந்த ஆண்டு  வாழ்நாள் சேவை விருது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

பிறப்பில் மலையாளியாக திகழ்ந்த இவர், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராவார். ஸ்ரீ நாராயண குரு சங்கத்தின் தலைவராக கடமையாற்றி இலங்கையில் வாழும் மலையாள சமூகத்தை வழிநடத்தக்கூடிய பாத்திரத்தை அவர் வகித்திருந்தார்.

அரசாங்க பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். பல ஜனாதிபதிகளுக்குக் கீழ் உரைபெயர்ப்பாளராக இவர் கடமையாற்றியிருந்தார்.

அன்னாரது பூதவுடல் பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் நேற்று (2) காலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (3) காலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.