Main Menu

பிரம்மாண்டமாக தொடங்கியது ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ திரைப்பட படப்பிடிப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது. இயக்குநர் ஷங்கர் வில்லனாகவும், பாசில் ஜோசப் ரஜினியின் மகனாகவும் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் பிற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ‘ஜெயிலர் 2’ பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.