Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்த ‘மர்ம-கை’ எது? – மனோ கணேசன் கேள்வி

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளான, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் புதிதாக வந்தவர்கள் அல்ல. விபரீதங்கள் நிகழ்ந்த காலத்திலேயே, பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆகவே அன்று அவர்களையும் பணியாற்ற விடாமல் தடுத்த “மர்ம-கை” எது எனவும் கண்டறிய பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (14) கேசரிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது முன்னெடுக்கப்படும் விசாரணை மிகவும் சரியானதே. சலே உள்ளிட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்; உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த மர்மக் கை அம்பலப்படுத்தப்பட வேண்டும அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.