Main Menu

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மம்மூட்டி, இதற்கான சான்றிதழையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார்.

சினிமா துறையில் அவர் ஆற்றியுள்ள நீண்டகால மற்றும் சிறந்த சேவையைக் பாராட்டும் முகமாக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.