Main Menu

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து

மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடந்த விமானக் கண்காட்சியின் போது, ​​இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

வொஷிங்டனின் விட்பே தீவில் உள்ள மின்னணுத் தாக்குதல் படைப்பிரிவு 129-ஐச் சேர்ந்த இரண்டு அமெரிக்கக் கடற்படை EA18-G கிரௌலர் விமானங்கள் இந்த மோதலில் ஈடுபட்டன என்று அமெரிக்க பசுபிக் கடற்படையின் கடற்படை விமானப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் அமெலியா உமாயம் கூறினார்.

விபத்தினை அடுத்து பாராசூட்டுகள்

மூலம் குதித்து உயிர் தப்பிய விமானப் பணியாளர்கள் காயங்களின்றி சீரான நிலையில் இருந்ததாக தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் இணையத்தில் பரவி வரும் காணொளிகளில், விமானிகள் வெளியேறுவதற்கு முன்பு, இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகுவதை காட்டியது.