Main Menu

Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று

PSG அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பரிஸ் உதைபந்தாட்ட கழகம் மீதான கொரோனா தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுவரை ஆறு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஏழாவது வீரராக Kylian Mbappé இற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை PSG அணியைச் சேர்ந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அதில் Kylian Mbappé இற்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் La Fédération française de football அமைப்பு அறிவித்துள்ளது.  தவிர, எதிர்வருகின்ற எந்த ஒரு போட்டிகளும் பிற்போடப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.

பகிரவும்...