Main Menu

பேரா.ச. சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல் – முதலமைச்சர் வெளியிட்டார்

பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்.

நேற்றைய தினம் செப்டெம்பர் 7ம் திகதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதலமைச்சர் ஓ.பி. எஸ். பன்னீர்செல்வம், தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு அமைச்சர் ம. பாண்டியராஜன், உலகத்த தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ. விஜய ராகவன் , தமிழ் மொழிவளர்ச்சித்துறை துணை இயக்குனர் ம. சி. தியாகராஜன்
ஆகியோர் முன்னிலையில் இந்நூலை வெளியிட்டு வைத்தார்.

பேராசிரியர்.ச. சச்சிதானந்தம் அவர்கள் பிரான்சில் கடந்த பல ஆண்டுகளாக பன்னாட்டு உயர்கல்வி நிறுவனத்தின் (Institut International des Etudes Supérieures) (அண்ணாமலை பல்கலைக்கழகம் – ஐரோப்பிய மையம்) ஊடாக ஐரோப்பியத் தமிழர்களுக்கு அரியதொரு கல்விச்சேவையை வழங்கி வருபவர். அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்ந்த பீ.ஏ., எம்.ஏ.பட்டதாரிகளை உருவாக்கி, பலதுறைகளில் பட்டப் படிப்புகளிலும் புலம்பெயர் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் செந்தமிழின் செழுமையையும் பழமையையும், உலகெலாம் வேற்றின சான்றோருக்கும் பறைசாற்றும் பணியின் ஓர் அம்சமாக வெளியிடப்பட்ட பிரெஞ்சு மொழியிலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பினை பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார் .

இதேவேளை ஜேர்மனிய மொழியிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மொழி பெயர்க்கப்பட் ட நூல்களின் விபரங்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  1. இன்னா நாற்பது – 40 பாடல்கள்
  2. இனியவை நாற்பது – 40 பாடல்கள்
  3. கார் நாற்பது – 40 பாடல்கள்
  4. களவழி நாற்பது – 40 பாடல்கள்
  5. ஐந்திணை ஐம்பது – 50 பாடல்கள்
  6. ஐந்திணை எழுபது – 70 பாடல்கள் (4 பாடல்கள் கிடைக்கவில்லை)
  7. திணைமொழி ஐம்பது – 50 பாடல்கள்
  8. கைந்நிலை – 60 -பாடல்கள் (18 பாடல்கள் சிதைந்துள்ளன)
  9. நாலடியார் – 400 பாடல்கள்
  10. நான்மணிக்கடிகை – 101 பாடல்கள்
  11. ஆசாரக்கோவை – 100 பாடல்கள்
  12. திணைமாலை நூற்றைம்பது – 153 பாடல்கள்
  13. பழமொழி நானூறு – 401 பாடல்கள்
  14. சிறுபஞ்சமூலம் – 102 பாடல்கள்
  15. முதுமொழிக்காஞ்சி – 10 பாடல்கள் (பத்து வரிகள்)
  16. ஏலாதி – 80 பாடல்கள்
  17. திரிகடுகம் – 100 பாடல்கள்

மொத்தம் : 1837 பாடல்கள்

பகிரவும்...