Main Menu

உக்ரைனில் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

உக்ரைனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.

அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா பெருந் தொற்றினால் 37 ஆயிரத்து 241பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 681பேர் பாதிப்படைந்ததோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 19,587பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 16,642பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 353பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.