Main Menu

8 மே நினைவு கூரலில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்

இரண்டாம் உலகப் போரில், ஆக்கிரமிப்பு நாசிப்படைகளின் மீது நேசப்படைகள் வெற்றி பெற்ற நாளான 8 மே 1945 இன் 76வது நினைவு நாளை இன்று எமானுவல் மக்ரோன் மரியாதை செய்து வணக்கம் செய்துள்ளார்.

இந்த அசாதாரண சூழ்நிலையிலும், மலர்வணக்கத்துடன் ஜனாதிபதி இன்று மாலை இந்த நிகழ்வைக் கொண்டாடி உள்ளார்.

ஐரோப்பிய உச்சி மாநாட்டிற்காக, போர்த்துக்கல் சென்றிருந்த ஜனாதிபதி இன்று மாலையே, பிரான்ஸ் திரும்பியதால் பிரத்தியேகமாக 18h00 மணிக்கே இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான பிரோன்சுவா ஒல்லோந்த், மற்றும் நிக்கோலா சார்க்கோசியும் கலந்து கொண்டிருந்தார்.

வழமைபோல் நாட்டின் விடுதலைக்காகப் போரில் வீழ்ந்துபட்ட மாவீரர்களின் நினைவாக, மணி ஒலித்ததுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...