Main Menu

60வது பிறந்தநாள் வாழ்த்து -அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் (24/07/2016)

தாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் திரு.அரசரட்ணம் ஸ்ரீஸ்கந்தராஜா (ரீ.ஆர்.ரீ வானொலி மூத்த அறிவிப்பாளர் A.S.ராஜா) அவர்கள் 23ம்திகதி ஜூலை மாதம் சனிக்கிழமை அன்று வந்த தனது 60வது பிறந்த நாளை 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.

60வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.அரசரட்ணம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை அன்பு மனைவி புவிராணி, அன்பு மகள் ஸ்ரீசங்கரி, அன்பு மகன் ஸ்ரீஜனகன், சகோதரர்கள் திரு.கந்தமூர்த்தி குடும்பம் (இலங்கை) , திரு.கார்த்திக் குடும்பம் (பிரான்ஸ்) ,சகோதரி சித்ரா பவன் குடும்பம் (நோர்வே) மற்றும் மச்சான்மார், மச்சாள்மார் ,மருமக்கள், பெறா மக்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

60வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.அரசரட்ணம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு நேயர்கள் திரு திருமதி.குகன் குடும்பம், திரு திருமதி.நிமல் குடும்பம்

அவர்களுக்கும் எமது நன்றிகள்.



காலை மலரும் வேளை தனில்,
பூக்களில் தென்றலானாய்! 
மதியம் நெருங்கும் நேரமதில்,
தேனொடு பால் கலந்தாய்!
வீரம் பாசம் காதல் என
அமுதம் தனை நீ தந்தாய் !
மாலை மயங்கும் போதினிலே,
கேள்வியின் நாயகனாய்
வேள்வி பல நீ செய்தாய்! 
நூல்கள் பல கற்றவரும்
நூலாய் தான் நொந்திடவே
விடை தேடி தவிக்க வைத்தாய் !

பெரிசு முதல் சிறிசு வரை
இருந்ததில்லை பாரபட்சம் – அனைத்து
மாந்தரும் உன்மேல் பட்சம்!

உன்னை உலகம் வாழ்த்தும்
உன்னை இசை வாழ்த்தும்
உன்னை எம் அன்பு வாழ்த்தும்!

நல் வாழ்வு நீ வாழ்ந்து
நலம் நாளும் பெற வேண்டும்!

நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட.. 
ஆண்டு நூறு கடந்தாலும் ஆனந்தமாய் நீ வாழ..

வாழ்த்துகின்றோம் ! வாழ்த்துகின்றோம் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

– TRT தமிழ் ஒலி குடும்பம்

MR MRS OK