Main Menu

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படலாம் ? – கல்வி அமைச்சின் செயலாளர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (20)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  நடைபெற்றது. வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அதன்படி, விசாரணை முடிவுகளின்படி செயற்படுமாறு ஜனாதிபதியும் அமைச்சரும் ஆலோசனை வழங்கினர் என்றார்.