145 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் ஊழியர்
புத்தளத்தில் 145 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தபால் ஊழியர் ஒருவர் தம்வசம் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.புத்தளம் வாக்காளிப்பு நிலையங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முகவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட தபால் அத்தியட்சகர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் தபால் அத்தியட்சகரினால் வணிக நிறுவனமொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.