Main Menu

41 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது 41  நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட VOC-202012/01 உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியங்களில் ஐந்தில் உள்ள 40 பிற நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் குறைந்தளவிலான  எண்ணிக்கையிலான நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட 501Y.V2 உருமாறிய கொரோனா வைரஸ் ஆறு நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அல்லது பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்  பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பல நாடுகளும் பிரித்தானியாவுக்கான பயணங்களை இடைநிறுத்தியிருந்தன.

ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள புதிய வகை  கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...