4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 11 மணி வரை சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்த தேர்தல் ஆணையர் சாஹு 11 மணி நிலவரப்படி சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நான்கு தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் சதவீதம்:-
1. அரவக்குறிச்சி : 34.89, 2. திருப்பரங்குன்றம் : 30.02, 3. ஒட்டப்பிடாரம் : 30.28, 4. சூலூர் : 31.55