Main Menu

21வது பிறந்த நாள் வாழ்த்து – ஆனந்தபாஸ்கரன் அனோஜன் (31/01/2022)

தாயகத்தில் உடுவிலையை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தபாஸ்கரன் பிறேமரூபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அனோஜன் தனது 21வது பிறந்தநாளை 31ஆம் திகதி ஜனவரி மாதம் திங்கட் கிழமை தனது இல்லத்தில் அன்பு தம்பி சாருஷனுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 21வது பிறந்த நாளை கொண்டாடும் அனோஜனை அன்பு அப்பா ஆனந்த பாஸ்கரன், அன்பு அம்மா பிரேமரூபி, தம்பி சாருஷன், தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, அம்மம்மா,பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார் மாமிமார், சித்தப்பாமார் சித்திமார், அண்ணாமார் அக்காமார், தம்பிமார் தங்கைமார், மச்சான்மார் மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலமாக பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 21வது பிறந்த நாளை கொண்டாடும் அனோஜனை TRT தமிழ் ஒலி கலைக்குடும்பத்தினர் அன்பு நேயர்கள் அனைவரும் பார்போற்றும் பண்பாளராக படித்து பட்டங்கள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள், அன்பு தம்பி ஆனந்தபாஸ்கரன் பிறேமரூபி தம்பதிகள், தம்பி சாருஷன்.

அவர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...