Day: July 1, 2026
பிரான்ஸ் – Bouches-du-Rhône பகுதியில் இரண்டு பெரிய காட்டுத் தீ விபத்துகள்

பிரான்சின் Bouches-du-Rhône மாவட்டத்தில் இன்று ஜூலை 1 ஆம் தேதி, புதன்கிழமை மாலை இரண்டு இடங்களில் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அவை Rognac மற்றும் Lançon-Provence ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன. Rognac பகுதியில் ஏற்பட்ட தீ ரோனியாக் நகரின் D113மேலும் படிக்க...
பிரான்ஸ்: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்

2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிவடையும் நிலையில், கோடைகாலத்தின் தொடக்கத்துடன் பல புதிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகின்றன. புதிய குழந்தை பிறப்பு விடுப்பு அறிமுகம் ஜூலை 1 முதல் புதிய பெற்றோர்கள் “பிறப்புமேலும் படிக்க...
விஜய் தலைமையில் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து விவாதம்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமைக் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கம் குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சென்னை கோவளத்தில் தவெக தோழமை கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமானமேலும் படிக்க...
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

டென்னிஸ் உலகின் ஜாம்பவானான Serena Williams, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கிய Wimbledon Championships தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். 44 வயதான அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டன் மத்திய மைதானத்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் Maya Joint-ஐ எதிர்கொண்டார்.மேலும் படிக்க...
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமாரமேலும் படிக்க...
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார். வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பனமேலும் படிக்க...
யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவினால் கடந்த 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் இன்றைய தினம் புதன்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகை தந்தமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப் பீடாதிபதிக்கு எதிரான அவதூறு! – சட்ட நடவடிக்கை ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த 14 பேருக்கும் எதிராக, நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ், பருத்தித்துறை நீதவான்மேலும் படிக்க...
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் உத்தரவு

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘சரிகம’ நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இளையராஜா தரப்பால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலேயேமேலும் படிக்க...
இலங்கையை மீண்டும் உலக வங்கி தரம் உயர்த்தியது

உலக வங்கியினால் இன்று (1) வெளியிடப்பட்ட சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டிற்கு அமைய, இலங்கை மீண்டும் ஒருமுறை உயர்-மத்திய வருமானம் பெறும் நாடாக (Upper-Middle Income Economy) தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடிமேலும் படிக்க...
அவசரகால நிலையினை நீடிக்காதிருக்க தீர்மானம்

பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இறுதியில்மேலும் படிக்க...
சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு

முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார். இதனிடையே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்குமேலும் படிக்க...
முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத் தில் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின்மேலும் படிக்க...
“தவெக கூட்டணியில் உள்ளது மதிமுக; இனி எல்லாமே வெற்றிதான்” – வைகோ உற்சாகம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘‘சீமைக்கருவேலமேலும் படிக்க...
யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள்மேலும் படிக்க...
உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்: ஜூன் மாதம் அதிக வெப்பநிலை பதிவு

உலகின் கடல்கள் இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிக வெப்பமான ஜூன் மாதத்தை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus Marine Service வெளியிட்ட தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாகமேலும் படிக்க...
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த வாக்குமூலம் ஒன்றை அளித்தார். இதன்போது, நிலக்கரி கொள்முதல் மற்றும் அது தொடர்பானமேலும் படிக்க...
கட்டார் எயார்வேஸ் எடுத்த முடிவு – இன்று முதல் மீள ஆரம்பம்

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது வானூர்தி சேவைகளை இன்று (01) முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது. இதன்படி, தினசரி 5 வானூர்தி சேவைகள் என்ற அடிப்படையில் வாராந்தம் மொத்தம் 35 வானூர்தி சேவைகளை பண்டாரநாயக்க சர்வதேசமேலும் படிக்க...

