Main Menu

இலங்கையை மீண்டும் உலக வங்கி தரம் உயர்த்தியது

உலக வங்கியினால் இன்று (1) வெளியிடப்பட்ட சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டிற்கு அமைய, இலங்கை மீண்டும் ஒருமுறை உயர்-மத்திய வருமானம் பெறும் நாடாக (Upper-Middle Income Economy) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இருப்பினும், அந்த நெருக்கடியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2025 ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளதாக உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகள் மீண்டும் புத்துயிர் பெற்றமை, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தாக்கம் செலுத்திய முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.