Day: March 3, 2021
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (03/03/2021)
தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்கள் இன்று 03.03.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ் சென்ற அண்ணாமலை இராஜேந்திரம் அவர்களின் அன்புமேலும் படிக்க...
முஸ்லிகளது நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவம் அளியுங்கள் – இரணைதீவு மக்கள் கோரிக்கை
கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று (03) காலை இரணை தீவு மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதோடு, வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் மகஜர் ஒன்றைமேலும் படிக்க...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்
சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல்மேலும் படிக்க...
அரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா?தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்
பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ என்றும் ஆசைப்பட்டதில்லை என்று சசிகலா கூறி உள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர். அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை – ஐ.நா. தகவல்
உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது கோப்புப்படம்உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பானமேலும் படிக்க...
கமலுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் சரத்குமார்: கமல்ஹாசனின் கருத்தால் குழப்பம்!
தமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டதாக அவர் இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கைமேலும் படிக்க...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் உள்ளிட்ட 329 பேரின் பெயர்கள் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாகமேலும் படிக்க...
மியன்மாரில் இன்றும் பல நகரங்களில் போராட்டம்- பாதுகாப்புத் தரப்பு துப்பாக்கிச் சூடு!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாங்கோன் மற்றும் மாண்டலே ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட பல இடங்களில் எதிர்ப்பாளர்கள் மீதுமேலும் படிக்க...
தி.மு.க. தேர்தல் அறிக்கை மார்ச் 11இல் வெளியிடப்படும் – ஸ்டாலின்
தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் திகதி வெளியிடப்படும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாகமேலும் படிக்க...
சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக வைகோ அறிவிப்பு!
சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ம.தி.மு.க. வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவர். அதையே கட்சியினர் விரும்புகின்றனர்.மேலும் படிக்க...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து இன்றும் (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்குமேலும் படிக்க...
தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான உறவை சீர்குலைக்கவே ‘இடத்தேர்வு’ பிரச்சினை- வேலுகுமார்
முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ஷ அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனமேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்!
இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரித்தானியா தலைமையிலான உறுப்பு நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக பேரவையில் அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும்மேலும் படிக்க...