Main Menu

இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரிவினைவாதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்டார்.

சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளபோதிலும் இவ்வாறான இடத்தை தெரிவு செய்துள்ளமையானது அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதாக கூறினார்.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டல்களை பின்பற்றாத நாடு இலங்கை மாத்திரமே என்றும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...