Day: March 2, 2021
பிரான்ஸில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி!
பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்தும் பணியை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. பிரான்ஸின் மருத்துவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும், சுகாதார அமைச்சின் ஒரு அங்கமான, சுகாதார உயர் ஆணையமான HAS (Haute Autorité de santé) இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மற்றையமேலும் படிக்க...
ஆங்சான் சூகிக்கு எதிராக மேலும் சில குற்றச் சாட்டுக்கள்!
மியன்மார் அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சான் சூகி மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூகியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர். காணொளி அழைப்புமேலும் படிக்க...
ஊழல் வழக்கில் சிக்கிய பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரியமேலும் படிக்க...
உலக சனத் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – WHO
உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,மேலும் படிக்க...
சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று இடம்பெறும் ஆலோசனையில்மேலும் படிக்க...
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ நாம் தமிழர் கட்சி எனும்மேலும் படிக்க...
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – சுகாதார அமைச்சு
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத்மேலும் படிக்க...
இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப் பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்!
கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளமேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறித்து இலங்கை கடும் அதிருப்தி
கடந்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்த அரசாங்கத்தின் பதிலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் புறக்கணித்ததாக இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் பதில்களையும் இணைந்து ஆணையாளரின் அறிக்கையுடன் வெளியிடுமாறு ஜெனிவாவில் உள்ளமேலும் படிக்க...