Main Menu

பிரான்ஸில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி!

பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்தும் பணியை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது.

பிரான்ஸின் மருத்துவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும், சுகாதார அமைச்சின் ஒரு அங்கமான, சுகாதார உயர் ஆணையமான HAS (Haute Autorité de santé) இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

மற்றைய கொரோனத் தடுப்பூசிகளைப் பெறுவதில் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இயலாமையினைப் போக்க, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை சுகாதார உயர் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி 18 வயதிலிருந்து 65 வயதிற்கு உட்பட்டோரிற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸின் மருத்துவமனைகளில் 69 சதவீதமானோர் கொரேனா தொற்று நோயளிகளால் நிரம்பி வழிகின்றது.

பகிரவும்...