Main Menu

உறவுகளை சந்திக்கும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது – திருமலை உறவுகள்

காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற விஷேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 1453 நாட்களுக்கு மேலாக குறித்த போராட்டமானது திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை காலமும் எந்தவிதமான தீர்வும் அதற்கு எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்திருப்பது தமக்கு ஆறுதல் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்

மேலும் இந்த கூட்டத்தின் பின்னராவது தமது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் தாம் இருப்பதாகவும் இதற்கு நல்லதோர் பொறிமுறையை ஜனாதிபதி முன்னெடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் மாவட்ட தலைவி ஆஷா குறிப்பிட்டார்.

பகிரவும்...