Main Menu

100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து! – காவல் துறையினர் மீது கல்வீச்சு

இரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்கு rue des Raguenets வீதியில் பலர் கூடியிருப்பதையும், எவரும் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமலும் இருப்பதை காவல்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.  மாலை 6 மணியின் பின்னரும் அவர்கள் அங்கு கூடியிருந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் பார்பிகியூ விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாடிக்கொண்டிருந்தனர். இப்போது காவல்துறையினர் தலையிட்டு இந்த நிகழ்வை நிறுத்த முற்பட்டனர்.  அதன் போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. காவல்துறையினர் மீது கற்கள் கொண்டு வீசி, அவர்களை தாக்கியுள்ளனர்.  கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த விருந்தில் கலந்துகொண்டனர். அவர்களை காவல்துறையினரால் சமாளிக்க முடியாமல் போக, கண்ணீர் புகை வீசி அவ் இடத்தை விட்டு பலரை வெளியேற்றினர். அன்றைய இரவு, Bobigny நகரில் இடம்பெற்ற ஒரு இரகசிய விருந்து ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பகிரவும்...